பெரோஸ்பூர் (பஞ்சாப்):பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள துல்சிகே கிராமத்தில் திருவிழா பொருட்காட்சியில் வேகமாக இயக்கப்பட்ட ராட்டினத்தில் இருந்த மூன்று சிறுவர்களின் கழுத்தில் கயிறு சிக்கியது. இதனால் மூன்று சிறுவர்களும் ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்தனர்.
ராட்டினத்தில் அதிகளவு ஆட்கள் இருந்ததாகவும், அவர்கள் ராட்டினத்தை மேலும் வேகமாக இயக்கும்படி கேட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது ராட்டினத்தில் இருந்த மூன்று சிறுவர்களின் கழுத்தில் கயிறு ஒன்று சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வேகமாக இயங்கிய ராட்டினத்தில் இருந்து மூன்று சிறுவர்களும் வெளியே விழுந்துள்ளனர். சிறுவர்கள் கீழே விழுந்த போது ராட்டினத்தை இயக்கிய நபர் காப்பாற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது.
சிறுவர்களின் கழுத்தில் கயிறு சிக்கியதால் அவர்களை காப்பாற்ற உடனடியாக ராட்டினம் நிறுத்தப்பட்டதால், சிறுவர்கள் ராட்டினத்தில் இருந்து வெளியே விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இறந்த சிறுவர்களின் உடல்கள் பெரோஸ்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்டது. உயிரிழந்த இரண்டு சிறுவர்களில் ஒருவர் 15 வயதுடைய கலுவலையைச் சேர்ந்த ஜோகிந்தர் சிங்கின் மகன் அமன்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்கு பின்னர் ராட்டினத்தின் உரிமையாளர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், முறையான அனுமதி இன்றி ராட்டினம் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் ஓராண்டுக்கு முன்பு மொஹாலியில் 50 அடி உயர ராட்டினம் விபத்துக்குள்ளான போது ராட்டினத்தில் 30 பேர் இருந்தனர். அதில் சுமார் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: சுங்கத்துறை தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட உ.பி இளைஞர் கைது - வடமாநிலத்தைச் சேர்ந்த 28 பேருக்கு பிணை!