தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆளில்லா படகிலிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்... விநாயகர் சதுர்த்தி நெருங்கும்வேளையில் பரபரப்பு - ராய்கட் போலீசார் உஷார் நிலை

ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் படகிலிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

BOAT
BOAT

By

Published : Aug 18, 2022, 6:02 PM IST

ராய்கட்: மகாராஷ்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான ஹரிஹரேஷ்வர் கடற்கரையில், ஆளில்லா படகு ஒன்று கடலில் மிதந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், படகை கரைக்கு இழுத்து வந்து சோதனை செய்தனர். அப்போது, படகில் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து படகிலிருந்த மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள், குண்டுகள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும் சில நாட்களில் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், கடற்கரையில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் ராய்கட் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க: தப்ப முயன்ற பாகிஸ்தான் கைதி சுட்டதில் காவலர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details