வாரணாசி:உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் இருந்து திரளான மக்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். 34 ஆந்திர பயணிகளுடன் கங்கை நதியில் சென்ற படகு திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கங்கை நதியில் தத்தளித்த சுற்றுலா பயணிகள் அனைவரையும், துரிதமாக செயல்பட்டு படகோட்டி கரைக்கு கொண்டு சேர்த்தார். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.