தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவளம், ஈடன் கடற்கரைகளுக்கு நீலக்கொடிச் சான்று

கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடிச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

கோவளம்
கோவளம்

By

Published : Sep 22, 2021, 10:32 AM IST

அழகான கடற்கரை, கடல்சார் சூழலியலைப் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதியான நடவடிக்கை மற்றுமொரு அங்கீகாரமாக தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேசப் புகழ்பெற்ற நீலக்கொடிச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், “கோவளம், ஈடன் கடற்கரைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலமும், 2020இல் அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் மறுசான்றினாலும் இந்தியாவில் தற்போது 10 சர்வதேச நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூய்மையான - பசுமையான இந்தியாவுக்கான பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக இது அமைந்துள்ளது என்று பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அங்கீகாரமான நீலக்கொடிச் சான்றிதழை வழங்கும் டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை வழங்குகிறது. அதன்படி, சிவராஜ்பூர்- குஜராத், கோக்லா- டையூ, காசர்கோடு மற்றும் படுபித்ரி- கர்நாடகா, கப்பாட்- கேரளா ருஷிகொண்டா- ஆந்திரா, கோல்டன்- ஒடிசா மற்றும் ராதாநகர்- அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய எட்டு இந்தியக் கடற்கரைகளுக்கு நீலக்கொடிச் சான்றிதழை உறுதிசெய்துள்ளது.

இதையும் படிங்க:IPL 2021: கடைசி ஓவரில் ராஜஸ்தானிடம் வெற்றியை பறிகொடுத்த பஞ்சாப்

ABOUT THE AUTHOR

...view details