டெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் புதன்கிழமை (ஜூலை 28) பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின்போது, கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள், காலநிலை மாற்றம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் குறித்த பிராந்திய சவால்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், “அமெரிக்க-இந்தியா உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகள் குறித்து பிளிங்கன் மற்றும் மோடி விவாதித்தனர்” என்றார்.
மேலும் அவர், “ஆன்டணி ஜே பிளிங்கன்- பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின்போது, அவர்கள் அமெரிக்க-இந்தியா உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து விவாதித்தனர். கோவிட் கட்டுப்பாடு, காலநிலை மாற்றம் மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு, அமெரிக்க- ஆஸ்திரேலியா- இந்தியா- ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய குவாட் கூட்டணி, பிராந்திய சவால்கள் மற்றும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர்” என்றார்.