தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் வெடித்து சிதறிய இரசாயன ஆலை- 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு! - வெடிவிபத்து

குஜராத்தில் இரசாயன ஆலை வெடித்து சிதறிய வெடிவிபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Blast
Blast

By

Published : Apr 11, 2022, 1:00 PM IST

பரூச்: குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள தாகேஜ் பகுதியில் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த ஆலை ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) நள்ளிரவு பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில், 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் காவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து தீயணைப்பு துறை தரப்பில், “சம்பவ இடத்தில் 5 தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் குஜராத் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஆலை சுகாதார மற்றும் பாதுகாப்பு துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். எனினும் ஆலையில் நடந்த வெடிவிபத்துக்கான காரணங்கள் வெளியாகவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விபரீத போட்டோஷூட்.. ஆற்றில் விழுந்த புதுமண தம்பதி... கவலைக்கிடம்!

ABOUT THE AUTHOR

...view details