தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆன்லைனில் பணம் பறிக்க இப்படியும் வழியா.! உஷாரா இருங்க ? - உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசத்தில் பாலியல் பணப் பறிப்பு கும்பலுக்கு பணம் வழங்குவதற்காக போலி கடத்தல் நாடகம் மூலம் தன் தந்தையிடம் 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு இளைஞர் மிரட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

கடத்தல் நாடகம்
கடத்தல் நாடகம்

By

Published : Jan 21, 2023, 4:15 PM IST

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் தனது பாலியல் ரீதியிலான வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டிய கும்பலுக்கு பணம் கொடுக்க தன்னைத் தானே கடத்தி பெற்றோரிடம் பணம் கேட்டு இளைஞன் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு, சமூக வலைதளம் மூலம் அங்கிதா சர்மா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு விரிக்கப்பட்ட வலையை பற்றி துளியும் அறியாத இளைஞர், இளம்பெண்ணிடம் தனது ரகசியங்களை ஒப்புவித்துள்ளார். மேலும் சமூக வலதள பழக்கம் நாளடைவில் போன் மூலம் தொடர்புக் கொண்டு பேசும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

ஒருநாள் இளைஞருடன் வீடியோ காலில் அரைநிர்வாணமாக பெண் தோன்றி பேசியதாக கூறப்படுகிறது. பெண்ணை நம்பிய இளைஞரும் அரைநிர்வாணமாக வீடியோ காலில் பேசியுள்ளார். இளைஞரது வீடியோவை ரெக்கார்டு செய்து கொண்ட பெண் அதைக் கொண்டு அவனை மிரட்டத் தொடங்கி உள்ளார்.

மேலும் 30 ஆயிரம் ரூபாய் பணம் தராவிட்டால் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி விடுவதாக அடிக்கடி மிரட்டியதாக கூறப்படுகிறது. பயந்த போன இளைஞர் பணம் பறிப்பு கும்பலுக்கு 30ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக, அண்டை மாவட்டமான பிரதாப்கர்க் சென்று தன்னைத் தானே கடத்திக் கொண்டு, மற்றவரகள் கடத்தியதாக தந்தைக்கு வாட்ஸ் அப் கால் மூலம் பேசியுள்ளார்.

இரண்டு மூன்று முறை தந்தையை தொடர்பு கொண்ட இளைஞர், கருப்பு வேனில் சிலர் தன்னை கடத்தியதாகவும், 2 லட்ச ரூபாய் பணம் தராவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டுவதாக தந்தையிடம் கூறியுள்ளார். மகன் கடத்தப்பட்டது குறித்து தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இளைஞரின் செல்போன் எண்ணை கொண்டு விசாரணை நடத்திய போலீசார், பிரதாப்கர்க்கில் இருந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து இளைஞரிடம் விசாரணை நடத்திய போலீசார், மிரட்டல் விடுக்கப்பட்ட எண்ணை பெற்றுக் கொண்டு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கோவா வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details