புதுச்சேரி: வீராம்பட்டினம் மீனவ கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தேவன். இவருடைய மனைவி எழிலரசி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
கருப்பு பூஞ்சை: புதுச்சேரியில் பெண் ஒருவர் உயிரிழப்பு! - புதுச்சேரியில் கருப்பு பூஞ்சையால் பெண் உயிரிழப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த பெண் உயிரிழந்தார்.
எழிலரசி
இதையடுத்து அவருக்கு அங்கேயே தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி, அவர் இன்று (மே.31) காலை உயிரிழந்தார். புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு, இது முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா தொற்றிலிருந்து மீண்ட தொழில் அதிபர் கறுப்பு பூஞ்சையால் உயிரிழப்பு!