டெல்லி: இது தொடர்பாக ஒன்றிய ரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் சதானந்த கவுடா தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 1,06,300 லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி குப்பிகள் இன்று ஒதுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 53,000 ஆம்போடெரிசின்-பி குப்பிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
மாநிலங்களுக்கு 1 லட்சம் ஆம்போடெரிசின்-பி குப்பிகள் ஒதுக்கீடு - கறுப்பு பூஞ்சை
கறுப்பு பூஞ்சை நோய்க்கு வழங்கப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.
மாநிலங்களுக்கு 1 லட்சம் ஆம்போடெரிசின்-பி குப்பிகள் ஒதுக்கீடு
கர்நாடக மாநிலத்திற்கு 9 ஆயிரத்து 400 லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி, 4 ஆயிரத்து 680 ஆம்போடெரிசின்-பி மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மருந்து உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய அரசு அண்மையில் ஐந்து நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதானி நிறுவன பங்குகள் சரிவு - முதலீட்டாளர்கள் கணக்குகளை முடக்கியதால் ஊசல்!