தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவின் தோல்வியை இனிப்பு வழங்கி கொண்டாடும் விவசாயிகள் - மேற்கு வங்கத்தில் மம்தா வெற்றி

மேற்கு வங்கத்தில் பாஜக சந்தித்திருக்கும் தோல்வியை டெல்லியில் போராடும் விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

By

Published : May 2, 2021, 7:53 PM IST

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கு திருணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஹாட்ரிக் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளார்.

இந்தத் தேர்தலில் மம்தாவை வீழ்த்தி மேற்கு வங்கத்தை கைப்பற்ற பாஜக தனது முழு பலத்தையும் பயன்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி, அமித் ஷா, ஜெ.பி. நட்டா எனப் பெரும் படையே மம்தாவை எதிர்த்துக் களமிறங்கிய போதிலும் பாஜகவுக்கு 100-க்கும் குறைவான இடங்களே கிடைத்துள்ளன.

அதேவேளை, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி மம்தா அபார வெற்றிபெற்றுள்ளார். பாஜகவின் இந்தத் தோல்வியையும், மம்தாவின் வெற்றியையும் ஒட்டுமொத்த விவசாய சமூகமே கொண்டாடுவதாக பாரதிய கிசான் யூனியன் தெரிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக இவர்கள் பல மாத காலமாகப் போராடிவரும் நிலையில், பாஜகவின் தோல்வியை லட்டு கொடுத்தும், ஒளி விளக்குகள் ஏற்றியும் கொண்டாடுவோம் என விவசாய சங்த்க தலைவர் குர்நாம் சிங் சதூனி மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details