தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவின் சபாநாயகர் ஆகிறார் பாஜகவின் ராகுல் நர்வேகர் - 164 வாக்குகள் பெற்று வெற்றி!

மகாராஷ்டிராவின் சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்குப்போட்டியிட்ட பாஜக ராகுல் நர்வேகர் 164 வாக்குகளைப் பெற்று சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகாரஷ்டிராவின் சபாநாயகர் ஆகிறார் பாஜக ராகுல் நர்வேகர்- 164 ஓட்டுகள் பெற்று வெற்றி
மகாரஷ்டிராவின் சபாநாயகர் ஆகிறார் பாஜக ராகுல் நர்வேகர்- 164 ஓட்டுகள் பெற்று வெற்றி

By

Published : Jul 3, 2022, 12:54 PM IST

மும்பை:மகாராஷ்டிராவில் நிலவிய அரசியல் சச்சரவுகளைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். இந்நிலையில் இன்று(ஜூலை 3) மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சபாநாயகருக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் உத்தவ் தாக்ரேவின் தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த ராஜன் சால்வி 107 வாக்குகள் பெற்றார். பாஜகவைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்பு அமர்வு இன்று(ஜூலை 3) காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் நாளைய கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையிலான அரசிற்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. நாளைய கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே அவரது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

இதையும் படிங்க:சிவசேனாவிலிருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம் - உத்தவ் தாக்கரே!

ABOUT THE AUTHOR

...view details