தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவின் 'உளவாளி' மம்தா - காங்கிரஸ் தலைவர் கடும் தாக்கு - மம்தா காங்கிரஸ் மோதல்

காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி மம்தா பானர்ஜியை உளவாளி என்று கூறி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

By

Published : Dec 2, 2021, 9:04 PM IST

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நேற்று காங்கிரஸ் கட்சி குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்த மம்தா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று ஒன்று இல்லை எனவும், காங்கிரஸ் தலைமையின் செயல்பாடு மோசமாக உள்ளது எனவும் விமர்சித்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக, காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் மம்தாவை கடுமையாக சாடியுள்ளார். மம்தா கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரசிடம் 20 விழுக்காடு வாக்குகள் உள்ளன. ஆனால் திரிணாமுல் கட்சியிடம் 4 விழுக்காடு வாக்குகள்தான் உள்ளன.

இப்படியிருக்க அவர்கள் பாஜகவையும், மோடியையும் எவ்வாறு எதிர்கொள்வார்கள். மம்தாவின் நோக்கம் காங்கிரசை பலவீனப்படுத்துவதான். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை பலவீனமாக்கி, மோடியின் உளவாளியாக செயல்படுகிறார்.

மம்தாவுக்கு தேசிய கீதத்தைக் கூட மதிக்கத்தெரியவில்லை. கொள்கைக்காகப் போராடுவதற்கும், சந்தர்ப்பவாத அரசியல் செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. பாஜவின் செயல்களையே மம்தாவும் பின்பற்றிவருகிறார்." இவ்வாறு அதிர் ரஞ்சன் மம்தாவை கடுமையாக சாடியுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் ZyCoV-D தடுப்பூசி அறிமுகம்

ABOUT THE AUTHOR

...view details