தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முகம்மது நபி குறித்து அவதூறு; பாஜக பிரமுகர் கைது! - ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா கைது

முகம்மது நபி குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்ட பாஜக இளைஞர் அணித் தலைவர் ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா (Harshit Srivastava) அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Harshit Srivastava
Harshit Srivastava

By

Published : Jun 8, 2022, 11:43 AM IST

கான்பூர்: தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் ஆட்சேபத்துக்குரிய வகையில் முகம்மது நபி குறித்த பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் வளைகுடா மற்றும் அரபு கூட்டமைப்பு நாடுகள் இந்தியாவுக்கு கண்டங்கள் தெரிவித்தன. இது சர்வதேச அளவில் சர்ச்சையாக எதிரொலித்தது.

இதற்கிடையில் நுபுர் சர்மாவிற்கு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையின் சூடு தணிவதற்குள் கான்பூர் மாவட்ட பாஜக இளைஞரணி நிர்வாகி ஒருவர் ட்விட்டரில் முகம்மது நபி குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்தப் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை உடனடியாக கைதுசெய்தனர். கான்பூரில் ஏற்கனவே இரு தரப்புக்கு இடையே சில நாள்களுக்கு முன்பு வன்முறை வெடித்த நிலையில், இந்த உடனடி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'நபி குறித்து பேசுவதற்கான தைரியத்தை பாஜக செய்தித் தொடர்பாளர்களுக்கு யார் கொடுத்தது' - பிருந்தா காரத் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details