பிகார் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி 114 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பாஜகவைச் சேர்ந்தவரே முதலமைச்சராக வேண்டும் - தொண்டர்கள் கோரிக்கை! - பிகார் தேர்தல்
பாட்னா: பிகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்தவரே முதலமைச்சராக வேண்டும் என அக்கட்சி தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்மூலம், பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் நிதிஷ்குமாரே முதலமைச்சராக தொடர்வார் என பாஜக தேசிய தலைவர் நட்டா அறிவித்திருந்தார். ஆனால் இப்போது, ஐக்கிய ஜனதா தளத்தை காட்டிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எனவே, பாஜகவைச் சேர்ந்தரவரே முதலமைச்சராக வேண்டும் என அக்கட்சி தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பாஜக அமைச்சர் சத்ருகன் குமார் சாதி கூறுகையில், "பாஜக தொண்டர்கள் நிதிஷ் குமாரை நீண்ட நாட்களாக ஆதரித்து வருகின்றனர். தற்போதும் முதலமைச்சராக்கியுள்ளனர். ஆனால் இம்முறை முதலமைச்சர் பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்" என்றார்.