தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் பாஜக பிரமுகர் சுட்டு கொலை - பாஜக பிரமுகர் கொலை

டெல்லியில் 42 வயது மதிக்கத்தக்க பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஜித்து செளத்திரி என்பவர், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில்  பாஜக தலைவர் சுட்டு கொலை
டெல்லியில் பாஜக தலைவர் சுட்டு கொலை

By

Published : Apr 21, 2022, 3:40 PM IST

Updated : Apr 21, 2022, 5:31 PM IST

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியைச்சேர்ந்த ஜித்தேந்தர் என்கிற ஜித்து செளத்திரியை அவருடைய வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை உயர் அலுவலர் பிரியங்கா காஸ்யாபா கூறியாதவது:

'கடந்த புதன்கிழமை மாலை டெல்லியில் உள்ள மயூர் விஹார் கட்டம் அருகே காவல் துறையினர் ரோந்து சென்ற போது பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஜித்து அவருடைய வீட்டின் முன்பு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பரிசோதித்து பார்த்ததில், அவர் ஏற்கெனவே இறந்ததாக மருத்துவமனையினர் தெரிவித்தனர்.

அவர் கொல்லப்பட்ட இடத்தில் சில தோட்டாக்களையும் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளோம். இது தவிர நேரில் கொலையைப் பார்த்தவர்களையும் சிசிடிவி ஆதாரங்களையும் திரட்டி விசாரித்து வருவதாக' அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி நள்ளிரவில் கைது!

Last Updated : Apr 21, 2022, 5:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details