கொல்கத்தா: வடக்கு கொல்கத்தாவில் உள்ள காசிப்பூர் பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் இறந்த பாஜக பிரமுகர் வீட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார்.
பாஜகவின் யுவ மோர்ச்சா அமைப்பின் செயற்பாட்டாளராக இருந்த அர்ஜுன் சௌராசியா என்பவர், கோஷ் பாகன் என்னும் இடத்தில் உள்ள கைவிடப்பட்ட கட்டடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார் . இது தற்கொலை அல்ல கொலை என்றும்; மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸார் தான் இதனை செய்தது எனவும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். போலீசார் தரப்பில் இது ஆளும் கட்சியனரால் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு வந்த அமித்ஷா இன்று அர்ஜுன் சௌராசியா வீட்டிற்கு சென்றார் எனவும்; திறமையாக வேலை செய்யும் நபரை இழந்து விட்டோம் என பாஜகவின் பேச்சாளர் ஆமிக் பாட்டாச்சார்யா தெரிவித்தார்.