டெல்லி: தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி வேட்பு மனுத்தாக்கல் நடந்து முடிந்த நிலையில், தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள மாநிலங்களில் மட்டும் நேற்று (ஜூன் 10) தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4 இடங்களுக்கும், ஹரியானாவில் 2 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.