அகமதாபாத்:விறுவிறுப்பாக நடைபெற்று வரும் குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் 2-வது முறையாக வெற்றிக் கனியை பறிக்க உள்ளார்.
நகர்ப்புற தொகுதியான கட்லோடியாவில் போட்டியிட்ட முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், சுற்றுகள் முடிவில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 16 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார்.
காந்திநகர் மக்களவையின் அங்கமான கட்லோடியா தொகுதி, படிதார் (பட்டேல்) இன மக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக உள்ளது. பா.ஜ.கவின் கோட்டையாக கருதப்படும் கடலோடியா தொகுதி, அனந்திபென் பட்டேல், மற்றும் புபேந்திர பட்டேல் என இரு முதலமைச்சர்களை மாநிலத்திற்கு வழங்கி உள்ளது.
3 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட கடலோடியா தொகுதி எல்லை மறுவரைவுக்கு பின் கடந்த 2012ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதியாக பிரிக்கப்பட்டது. எல்லை பிரிப்புக்கு பின் கடலோடியா தொகுதியில் 2017 மற்றும் தற்போது என இரு முறை பூபேந்திர பட்டேல் போட்டியிட்டுள்ளார்.
முதலமைச்சர் தொகுதி எனக் கூறப்படும் கடலோடியாவில் முன்னாள் முதலமைச்சர் ஆனந்திபென் பட்டேல் 2012ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். 2017 மற்றும் 2022 (தற்போது) பூபேந்திர பட்டேல் போட்டியிட்டு வெற்றிக் கனியை பறிக்க உள்ளார்.
வரும் 12-ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் பதவியேற்க உள்ளதாக மாநில பா.ஜ.க தலைவர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Live Update: குஜராத், இமாச்சலப் பிரதேசம் தேர்தல் முடிவுகள்!