ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து அவரை கைது செய்யக்கோரி ஹைதராபாத்தில் பல பகுதிகளில், நேற்று (ஆக. 22) இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் தான் எந்த மதத் தலைவரின் பெயரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை என்று ராஜா சிங் விளக்கமளித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ராஜா சிங் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்று (ஆக. 23) காலை அவரைக் கைது செய்தனர். இந்த நிலையில், எம்எல்ஏ ராஜா சிங்கை சஸ்பெண்ட் செய்து, தெலங்கானா மாநில பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் தன்னுடைய கைதிற்கு எதிராக பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் தரப்பு, ஹைதராபாத் - நம்பள்ளி கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், அவரை உடனடியாக விடுவிக்கக்கோரி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்பின் ராஜா சிங் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க:முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து... பாஜக எம்எல்ஏ கைது