ஹைதராபாத்: தற்போது நிலவும் கோவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் மாநிலத்தில் ஐஏஎஸ் அலுவலர்களுக்காக சொகுசு கார்களை வாங்குவதற்காக தெலங்கானா அரசு எதிர்க்கட்சியின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. மாநிலத்தில் கூடுதல் ஆட்சியர்களுக்கு விநியோகிப்பதற்காக 32 புதிய சொகுசு மல்டி-யூடிலிட்டி கார்கள் ஞாயிற்றுக்கிழமை பிரகதி பவனை அடைந்தன.
குறைந்த வருவாய், போதிய மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாமை காரணமாக அரசு கருவூலம் மோசமான நிலையில் இருக்கும் இச்சூழலில் கார் ஒன்றின் விலை 25 லட்சம் ரூபாய் என வரும் தகவல்கள் புருவங்களை உயர்த்தச் செய்கின்றன.
இந்த நடவடிக்கையை விமர்சித்த பாஜக செய்தித் தொடர்பாளர் கே. கிருஷ்ணா சாகர் ராவ், "மாநிலத்தில் 'அதிகாரத்துவத்தைத் திருப்திப்படுத்த' முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் மேற்கொண்ட நடவடிக்கை 'பொதுக் கருவூலத்தின் குற்றவியல் தூண்டுதலுக்கு' வழிவகுக்கிறது" என்று கட்சியின் எதிர்ப்பைப் பதிவுசெய்தார்.
தெலங்கானா மாநிலத்தில் கூடுதல் ஆட்சியர்களுக்காக 32 அதி சொகுசு வாகனங்கள் வாங்க 11 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்ததை முதலமைச்சர் கே.சி.ஆர். எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்று அவர் வினா தொடுத்தார். ஒரு தொற்றுநோய்க்கு நடுவில் தெலுங்கானா முதலமைச்சர் "பொது பணத்தை பெருமளவில் வீணடிப்பதில்" ஈடுபடுவதாகக் கூறி, தற்போதைய பொது சுகாதார நிலைமையில் இந்த வாகனங்களை "பயங்கரமான மற்றும் சிந்திக்க முடியாதது" என்று வாங்குவதற்கான முடிவை அவர் குறிப்பிட்டார்.
ஒரு தொற்றுநோய்க்கு (கரோனா) நடுவில் தெலங்கானா முதலமைச்சர் 'பொதுப்பணத்தை பெருமளவில் வீணடிப்பதில்' ஈடுபடுவதாகக் கூறி, தற்போதைய பொது சுகாதாரம் இருக்கும் நிலைமையில் இந்த வாகனங்களை வாங்குவதை 'பயங்கரமான மற்றும் சிந்திக்க முடியாதது' என்று என்று குறிப்பிட்டார் கிருஷ்ணா சாகர்.
கரோனா ஊரடங்கால் மாநிலத்திற்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் கடன்களைத் திரட்ட நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) வரம்புகளை அதிகரிக்க விரும்புவதாகவும் நிதியமைச்சர் ஹரிஷ் ராவ் சமீபத்தில் அறிக்கைகள் வாயிலாகத் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணா சாகர், தற்போதைய பேச்சுகளில் நிதியமைச்சரின் குறைந்தபட்ச நிதி நெறிமுறை குறித்தும் கேள்வி எழுப்பினார். ஏனெனில் அவரது துறை அதி சொகுசு வாகனங்களுக்கு கோடி ரூபாய் வெளியிடுகிறது என்றார்.
சொகுசு கார்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் பணத்தை மருத்துவமனைகளில் படுக்கைகளை விரிவுபடுத்தவோ அல்லது ஏழைகளுக்கு இலவச மருத்துவம் வழங்கவோ பயன்படுத்தப்படலாம் என்று கிருஷ்ண சாகர் பரிந்துரைத்தார்.
இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரிய அவர், வாகனங்கள் வாங்குவதை நிறுத்துமாறு அரசிடம் கேட்டுக்கொண்டார்.