தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இந்து' என்ற சொல் குறித்த சர்ச்சை பேச்சு - காங்., எம்எல்ஏவுக்கு பாஜகவினர் கண்டனம்! - கர்நாடகா பாஜக பொறுப்பாளர் அருண் சிங்

இந்து என்று சொல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் ஜார்கிஹோலிக்கு, கர்நாடகா பாஜக பொறுப்பாளர் அருண் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

BJP
BJP

By

Published : Nov 8, 2022, 6:31 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் நிப்பானி நகரில், நேற்று(நவ.7) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான சதீஷ் ஜார்கிஹோலி, இந்து என்ற சொல் பாரசீகத்திலிருந்து வந்தது என்றும், அது ஆபாசமான பொருள் கொண்டது என்றும் தெரிவித்தார். எங்கிருந்தோ வந்த இந்து என்ற சொல் நம் மீது திணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

சதீஷ் ஜார்கிஹோலியின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரம், ஜார்கிஹோலியின் கருத்து துரதிர்ஷ்டவசமானது என்றும், இதனை காங்கிரஸ் கண்டிக்கிறது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

இந்த நிலையில், சதீஷ் ஜார்கிஹோலியின் பேச்சுக்கு கர்நாடக பாஜக பொறுப்பாளர் அருண் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "காங்கிரஸ் எப்போதும் நமது பண்டைய கலாசாரத்தை மோசமாகப் பேசுகிறது. சதீஷ் ஜார்கிஹோலி நமது கலாசாரத்தை அவதூறாகப் பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். சதீஷ் ஜார்கிஹோலியின் பேச்சை காங்கிரஸ் ஏற்கவில்லை என்றால், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதேபோல், பாஜக செய்தித்தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லாவும் கண்டனம் தெரிவித்தார். சதீஷ் ஜார்கிஹோலியின் கருத்து இந்துக்களை அவமதிப்பதாகவும், ஆத்திரமூட்டும் வகையிலும் இருப்பதாக தெரிவித்தார். இந்து பயங்கரவாதம், ராமர் பாலம், பகவத் கீதை என அனைத்தையும் விமர்சிப்பது வாக்கு வங்கிக்காகத்தான் என்றும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க:"இந்து என்ற சொல்லின் உண்மை அர்த்தம் தெரிந்தால் வெட்கப்படுவீர்கள்" - காங்கிரஸ் எம்எல்ஏவின் பேச்சால் சர்ச்சை

ABOUT THE AUTHOR

...view details