தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பாகிஸ்தான் மீது ஏன் திடீர் பாசம்'- அகிலேஷ் யாதவ்வுக்கு பாஜக கேள்வி! - சம்பித் பத்ரா

“பாகிஸ்தான் மீது திடீர் பாசம் ஏன், இதற்காக அகிலேஷ் யாதவ் வெட்கப்பட வேண்டும்” என பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா (Sambit Patra) அகிலேஷ் யாதவ்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Akhilesh
Akhilesh

By

Published : Jan 24, 2022, 6:12 PM IST

லக்னோ : நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்ட தேர்தல் பிப்.10ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வின் திடீர் பாகிஸ்தான் காதல் துரதிருஷ்டவசமானது. இதற்காக அவர் வெட்கப்பட வேண்டும்.

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா

மேலும் அகிலேஷ் யாதவ், பாகிஸ்தானின் நிறுவனர் எம்.ஏ. ஜின்னாவையும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்குள் பரப்புரைக்கு கொண்டுவருகிறார். மாநிலத்தில் வரும் தேர்தல்கள் பாஜகவின் வளர்ச்சி அரசியலுக்கும் சமாஜ்வாதியின் வளர்ச்சி அரசியலுக்கும் இடையேயானது.

பாஜகவின் வளர்ச்சி அரசியல் பூர்வாஞ்சல், பந்தேல்கண்ட், கோரக்பூர் இணைப்பு விரைவுச் சாலை போன்றது. ஆனால் சமாஜ்வாதியின் எக்ஸ்பிரஸ் வே குண்டர்கள் வளர்ச்சி, ஊழல், மாஃபியா ஆகியவற்றை ஒத்தது” என்றார்.

தொடர்ந்து, “தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என்பார்கள். அதற்கு முன்னோட்டமாக கருத்துக் கணிப்புகளில் கோளாறு என்று கூறுகின்றனர்” என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்வை விமர்சித்தார்.

சிவசேனா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

இதையடுத்து பாஜகவுடன் 25 ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்தது, “பயனற்றது” என்று உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு, “அது அவரின் தந்தை முடிவு” எனச் சுருக்கமாக பதில் அளித்தார்.

முன்னதாக அகிலேஷ் யாதவ் ஆங்கில தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவின் உண்மையான எதிரி சீனா என்றும், பாக்கிஸ்தான் அரசியல் எதிரி என்றும், பிஜேபி தனது “வாக்கு அரசியலுக்காக” பாகிஸ்தானை தாக்குகிறது என்றும் கூறியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள சம்பித் பத்ரா, 'பாகிஸ்தான் அரசியல் பகைவன், சீனா உண்மையான எதிரி' என்ற அகிலேஷின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :Punjab Polls 2022: பஞ்சாப்பில் திடீர் திருப்பம்.. பஞ்சாப் லோக் காங்கிரஸ், பாஜக கூட்டணி!!

ABOUT THE AUTHOR

...view details