தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த குஜராத் பாஜக எம்.பி - கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த குஜராத் பாஜக எம்.பி.

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அபய் பரத்வாஜ் இன்று (டிச.01) உயிரிழந்தார்.

Shri AbhayvBhardwaj
Shri AbhayvBhardwaj

By

Published : Dec 1, 2020, 8:04 PM IST

சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அபய் பரத்வாஜ் இன்று (டிச.01) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை, எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த அக்டோபர் மாதம் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அவரது நுரையீரல் மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து உடலுறப்புகள் செயலிழந்த நிலையில் பரத்வாஜ் உயிரிழந்தார்” எனக் கூறியுள்ளது.

மருத்துவமனை அறிக்கை

ராஜ்கோட்டைச் சேர்ந்த அபய் பரத்வாஜ் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர் ஆவார். இவர் கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். ”மக்களுக்கு அரும்பணியாற்றிவந்த தலைசிறந்த நபரை நாம் இழந்துள்ளோம்” என மோடி இவர் குறித்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அபய் பரத்வாஜுக்கு மீண்டும் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை நெகட்டிவாக வரும் பட்சத்தில் உறவினரிடம் அவரது உடல் நாளை ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உத்தரவு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details