தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பாஜக கண்டன பேரணி - BJP protest rally demanding implementation of one country single family card scheme

புதுச்சேரி: 'ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பாஜகவினர் கண்டன பேரணி நடத்தினர்.

பாஜக கண்டன பேரணி
பாஜக கண்டன பேரணி

By

Published : Nov 9, 2020, 4:54 PM IST

மத்திய அரசின் திட்டத்தின்கீழ் 'ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாஜக கண்டன பேரணி நடத்தினர்.

அப்போது பாஜக மகளிர் அணியின் சார்பில் குடிமைப் பொருள் வழங்கல் துறையைக் கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.

பாஜக மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்ற, இந்தப் பேரணியானது புதுச்சேரி அண்ணா சிலையில் தொடங்கி சட்டப்பேரவை முன்பு முடிவடைந்தது.

மேலும் இதில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'மக்கள் அனைவரும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் பயன்பெறுவர்' - அமைச்சர் காமராஜ்

ABOUT THE AUTHOR

...view details