தமிழ்நாடு

tamil nadu

டெல்லி அரசு வாட் வரியை குறைக்கக் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!

By

Published : Apr 30, 2022, 6:10 PM IST

டெல்லி அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Bjp
Bjp

புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாஜக மகளிர் அமைப்புகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இன்று (ஏப்.30) அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட முயற்சித்தனர்.

டெல்லி அரசு வாட் வரியை குறைக்கக் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!
டெல்லி அரசு வாட் வரியை குறைக்கக் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!

அப்போது பாஜக மகளிர் அமைப்புகளை சிஆர்பிஎஃப் பெண் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் தங்களை தாக்கியதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். இது குறித்து பாஜக டெல்லி மாநிலத் தலைவர் ஆதேஷ் குப்தா கூறுகையில், “பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை டெல்லி அரசு குறைக்கவில்லை.

இதனால் டெல்லி மக்கள் கூடுதல் பணவீக்கச் சுமையை சந்தித்து வருகின்றனர். நாட்டில் பாஜக ஆளும் மாநிலங்கள் வாட் வரியை குறைத்தாலும், டெல்லி அரசு அதை கண்டுகொள்வதில்லை. இதன் விளைவாக, முன்பு டெல்லியில் குறைந்த விலையில் டீசல் கிடைத்தது, ஆனால் இப்போது விலை உயர்ந்து வருகிறது” என்றார்.

டெல்லி அரசு வாட் வரியை குறைக்கக் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!
டெல்லி அரசு வாட் வரியை குறைக்கக் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் 45 ஆயிரம் கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றம்!

ABOUT THE AUTHOR

...view details