தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, இம்மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அண்மையில் நியமித்தது.
இந்நிலையில், கேரள மாநிலத்திற்கு இரு நாள் பயணமாக வருகை தந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அங்கு கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் நாணயத்தின் இரு பக்கங்கள்தான். இரண்டும் ஊழலில் திளைத்து மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளன. இருவரும் அதிகார வெறியை மட்டுமே கொண்டு மக்கள் திட்டங்களை புறக்கணித்தவர்கள்.