தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் வியூகம்: கோவா பறக்கும் நட்டா

வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கோவா மாநிலம் செல்கிறார்.

JP Nadda
JP Nadda

By

Published : Jul 21, 2021, 7:44 PM IST

கோவாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. மாநில முதலமைச்சராக பிரமோத் சாவந்த் உள்ளார். அடுத்தாண்டு தொடக்கத்தில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகளை பாஜக முடுக்கிவிட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 40 இடங்களில் 28 இடங்களை பாஜக வசமுள்ள நிலையில் அடுத்தத் தேர்தலிலும் வென்று ஆட்சியைத் தக்கவைக்க அக்கட்சித் தலைமை அனைத்துவிதமான செயல்பாடுகளையும் மேற்கொண்டுவருகிறது.

இதன் பின்னணியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்நேற்று (ஜூலை 20) சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றார்.

அதன் தொடர்ச்சியாக ஜெ.பி. நட்டா கோவா மாநிலத்திற்கு ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தில் தேர்தலுக்கான வியூகம், ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கோவிஷீல்டு தடுப்பூசி ஆயுள் வரை பாதுகாப்பு தரும் - ஆய்வில் தகவல்

ABOUT THE AUTHOR

...view details