தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மத விழாக்களுக்கு அனுமதி வழங்கக் கோரி பாஜக மனு

மத விழாக்களை நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

புதுச்சேரியில் மத விழாக்களுக்கு அனுமதி வழங்கக் கோரி பாஜக மனு
புதுச்சேரியில் மத விழாக்களுக்கு அனுமதி வழங்கக் கோரி பாஜக மனு

By

Published : Jul 14, 2021, 8:34 PM IST

புதுச்சேரி: கரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் விழாக்கள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கரோனா தொற்றுப் பரவல் குறைந்துவரும் காரணத்தால் வணிக நிறுவனங்கள், சிறு கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பள்ளிகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் உள் துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர் வில்லியம் ரிச்சர்ட் ஆகியோர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து மனு அளித்தனர்.

மக்களின் மன உளைச்சலைப் போக்க...

அந்த மனுவில், "கரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மகிழ்ச்சியை இழந்து மன உளைச்சலில் இருக்கின்றனர். எனவே ஆடி மாதம் வருவதால் மத வழிபாடுகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

மத விழாக்கள் நடத்துவதால் மக்களுக்கு மன அமைதி கிடைக்கும். எனவே வரும் விழாக் காலங்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் விழாக்களை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதையும் படிங்க: மோடிக்கு சேலை, வளையல், பூ, பொட்டு பார்சல்: எரிவாயு விலையைக் குறைக்க நூதனப்போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details