புதுச்சேரி: பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜ தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வரும் 29 ஆம் தேதி புதுச்சேரி வருவதாக அம்மாநில பாஜ தலைவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வரும் 29 ஆம் தேதி மாலை தனி விமானம் மூலம் புதுச்சேரி வருகிறார். அன்று இரவு புதுச்சேரியில் தங்குகிறார். மறுநாள் 30 ஆம் தேதி மதியம் புறப்படுகிறார். அன்றைய தினம், பொது கூட்டம், மாற்றுக் கட்சியினர் பாஜகட்சியில் இணைப்பு விழா போன்றவை நடைபெறுவதாக சுவாமிநாதன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பாஜ தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகின்றனர். அதற்கு முன்னதாக ஆட்சி மற்றும் கட்சியில் உள்ள பொறுப்புகளை ராஜினாமா செய்கின்றனர்.