தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடக்கம் - பாஜக பிரமுகர்கள்

இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று (ஜன 16) தொடங்குகிறது.

பாஜக தேசிய செயற்குழு கூட்டம்
பாஜக தேசிய செயற்குழு கூட்டம்

By

Published : Jan 16, 2023, 11:03 AM IST

டெல்லி: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஜனவரி 16 மற்றும் 17 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், இன்று (ஜன 16) டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள், கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட 350 பேர் பங்கேற்கின்றனர்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக் காலத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கவும், அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குஜராத்தில் அமேக வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மொடி கலந்துகொள்ளவுள்ளார். செயற்குழு கூட்டத்தின் முதல் நாளான இன்று பிரதமர் மோடி, டெல்லி சாலையில் வாகனத்தில் பேரணி செல்கிறார். இதற்காக சாலைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு போக்குவரத்துகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஜி20 கூட்டமைப்பின் உள்கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டம் புனேயில் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details