தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக எம்.பி. கௌசால் கிஷோர் மருமகள் தற்கொலை முயற்சி

பாஜக எம்.பி. கௌசால் கிஷோர் மகன் ஆயுஷின் மனைவி நேற்று இரவு தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக  எம்.பி கவுசல்  கிஷோர்  மருமகள் தற்கொலை முயற்சி
பாஜக எம்.பி கவுசல் கிஷோர் மருமகள் தற்கொலை முயற்சி

By

Published : Mar 15, 2021, 3:04 PM IST

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கௌசால் கிஷோரின் மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாஜக எம்.பி. கௌசால் கிஷோரின் மகன் ஆயுஷ். இவருடைய மனைவி நேற்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆயுஷின் மனைவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அதுமட்டுமல்லமல், இவரது தற்கொலை குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவைக் கண்ட காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வீடியோவில் அவரது கணவர் ஆயுஷ் மீது குற்றம்சாட்டியிருந்தார். அதில், 'என்னுடைய வீட்டில் என்னை யாரும் கவனிப்பதில்லை. என்னுடைய கணவர் என்னை நேசிப்பதில்லை. நான் சாப்பிட்டாலும், இல்லை என்றாலும் என்னை சிறிதும் கூட கவனிப்பதில்லை.

என்னிடம் போதிய பணம் கூட இல்லை. என்னையும் என்னுடைய குழந்தையையும் பற்றி ஒருபோதும் யோசித்ததில்லை. நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். இதனால், நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்' என்று வீடியோவில் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: அதிமுக தேர்தல் அறிக்கை - மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, மதுவிலக்கு அமல்படுத்தப்படும்!

ABOUT THE AUTHOR

...view details