குவாலியர் (மத்திய பிரதேசம்):மத்திய பிரதேசம் ஷிவ்புரி பிச்சோர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பாஜகவைச் சேர்ந்த பிரீதம் சிங் லோதி. இவரது மகன் தினேஷ் லோதி நேற்று இரவு அவரது சொகுசு காரில் அதிவிரைவாகச் சென்றதையடுத்து அருகிலிருந்த அவரது உறவினரின் இரு சக்கர வாகனத்தின் மீது ஏற்றி விபத்துக்குள்ளானது. புகாரின் அடிப்படையில் தினேஷ் லோதி மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர்.
நாடெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் திகைத்துக் கொண்டிருந்த நிலையில், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குதுகலமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் மத்திய பிரதேசம் பிச்சோர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரின் மகனான தினேஷ் லோதி அவரது சொகுசு காரில் பழைய கண்டோன்மெண்ட் சாலையில் அதிவேகமாகச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, அதே சாலை அருகே அவரது உறவினரான ரவிந்தர யாதவ் மற்றும் அவரது மகன் இருவரும் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்ததை அறிந்த தினேஷ் லோதி, அவரது சொகுசு காரின் கட்டுப்பாட்டை இழந்து ரவிந்தரா மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நூலிழையில் உயிர் தப்பிய ரவிந்தர யாதவ் மற்றும் அவரது மகன் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.