ஜெய்ப்பூர்:கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் சட்டப்பேரவை தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிரண் மகேஸ்வரி.
பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவர். 59 வயதான இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா வைரஸின் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கிரண் மகேஸ்வரி ஹரியானா மாநிலம் குர்கிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.29) இரவு காலமானார்.
கிரண் மகேஸ்வரி மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அசோக் கெலாட் தனது இரங்கல் செய்தியில், “இந்தக் கடினமாக நேரத்தில் கிரண் மகேஸ்வரி குடும்பத்தாருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் இழப்பை தாங்கும் சக்தியை அவர்களுக்கு இறைவன் கொடுக்கட்டும். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19க்கு உயிரிழந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.