லவ் ஜிகாத் விகாரத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விழித்துக்கொண்டு பழிக்குப் பழி வாங்க வேண்டும் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சங்கீத் சோம் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
லவ் ஜிகாத் விவகாரத்தில் இந்து இளைஞர்கள் பழிவாங்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு - லவ் ஜிகாத்
லக்னோ: லவ் ஜிகாத் விவகாரத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பழிவாங்க வேண்டுமென பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வாக்காளர்கள் இடையே உரையாடிய அவர், "லவ் ஜிகாத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். காவல் துறையும் சட்டமும் தனது கடமையைச் செய்யும்வரை நாம் பொறுத்திருக்க முடியாது. கட்டையையோ காலணியையோ எடுத்து அவர்களுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
தங்களது மகள்களையும் சகோதரிகளையும் பாதுகாப்பது இந்துக்களின் கைகளில்தான் உள்ளது. குற்றம்செய்பவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சமாஜ்வாதி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை" என்றார்.