தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2021, 2:26 PM IST

ETV Bharat / bharat

காலுக்கு மாஸ்க் அணிந்த உத்தரகண்ட் அமைச்சர் - நெட்டிசன்கள் கலாய்!

உத்தரகண்ட் மாநில அமைச்சர் சுவாமி யத்தீஸ்வர் ஆனந்த் காலில் முகக்கவசத்தை தொங்கவிட்டபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காலுக்கு மாஸ்க் அணிந்த உத்தரகண்ட் அமைச்சர்
காலுக்கு மாஸ்க் அணிந்த உத்தரகண்ட் அமைச்சர்

கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிதல் மிகவும் முக்கியம் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்தநிலையில் உத்தரகண்ட் மாநில பாஜக அமைச்சர் சுவாமி யத்தீஸ்வர் ஆனந்த் முகத்துக்கு அணியும் முகக் கவசத்தை தனது காலில் அணிந்திருப்பது போன்று வெளியான புகைப்படத்திற்கு பலர் கலாய்த்தும், கண்டனமும் தெரிவித்தும் வருகின்றனர்.

இந்தப் புகைப்படத்தில் அவருடன் பாஜக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். உடனிருந்தவர்களும் முகக்கவசத்தை சரியாக அணியவில்லை.

பாஜக அமைச்சர் சுவாமி யத்தீஸ்வர் ஆனந்த் தனது முகக்கவசத்தை தொங்கவிட மிகவும் தூய்மையான இடத்தை கண்டுபிடித்துள்ளார் என இணையவாசி ஒருவர் கலாய்த்துள்ளார்.

அமைச்சருக்கு கண்டனம்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கரிமா தசவுன், "கரோனாவைக் கட்டுபடுத்த ஆளும் பாஜக அரசு மேற்கொள்ளும் தீவிர நடவடிக்கைகள் இதுதான். அதோடு ஏழை மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் தண்டிக்கிறார்கள்" என்று விமர்சனம் செய்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அமர்ஜித் சிங் ராவத் கூறுகையில், " கரோனாவைத் தடுக்க பாஜகவினர் எந்தளவு அக்கறை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. கரோனா 2ஆவது அலையில் மத்திய அரசு போதிய ஏற்பாடுகள் செய்து கொடுக்ககாததால் பலர் உயிரிழந்துள்ளனர். சுவாமி யத்தீஸ்வர் ஆனந்த் இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 2,405 பேருக்குக் கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details