டெல்லி: விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பேசும்போது, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவில் இருந்தேன். ஜெயலலிதா இறந்துவிட்டார். அவரை மோடி தான் கொன்றுவிட்டார். காரணம் பிரதமர் வேட்பாளராக நிற்கப் போவதாகக் கூறியதால், பாஜக தான் கொன்றுவிட்டது” என்று பகிரங்கமாகத் தான் குற்றாட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இவரது சர்ச்சை பேச்சு பாஜக தலைவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக மாநில, தேசிய தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.