இந்தூர் :பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியா நேற்று (ஜூன் 19) அவரது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாஜக அலுவலக பாதுகாப்பு பணியில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். இதற்கு பல எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்னிவீர்களை விஜயவர்கியா அவமதித்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இது குறித்த பதிலளித்த விஜயவர்கியா "டூல்கிட் கும்பல்" தனது கருத்துக்களை திரிப்பதாக கூறினார். அக்னிவீர் பதவியில் இருந்த வீரர்கள் அவர்களது பதவிக்காலம் முடிந்ததும் அந்த அனுபவத்தை வைத்து பல துறைகளில் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்பதையே கூற முற்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.
நான்கு வருடங்களில் ரூ.11 லட்சம் :இதனைத் தொடர்ந்து, இந்தூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய விஜய்வர்கியா, ‘மத்திய அரசின் அக்னிபத் திட்டமானது நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் சேர இருப்பவர்களின் திறமையை மேம்படுத்தவும் அவர்கள் இத்திட்டத்தின் மூலம் மெருகேற்றிக் கொள்ளவும் உதவும். இருப்பினும் நாட்டின் பல பகுதிகளில் இத்திட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளப்பியுள்ளது. ராணுவப் பயிற்சியில் முதலில் ஒழுக்கம், இரண்டாவது கட்டளைகளைப் பின்பற்றுவதே ஆகும். அக்னிவீர்கள் பயிற்சி பெற்று நான்கு வருடங்களுக்கு பிறகு (ஆயுதப் படையிலிருந்து) வெளியே வரும்போது, அவர்களது கையில் 11 லட்சம் ரூபாய் இருக்கும் மற்றும் அவர்களது மார்பில் அக்னிவீரன் என்ற பேட்ஜுடன் வருவார்கள்’ என்று விஜய்வர்கியா கூறினார்.