டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, சுவேந்து அதிகாரி சந்திப்பு டெல்லியில் நடந்தது.
மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஜூன் 9) டெல்லியில் சந்தித்தார். அப்போது கட்சியின் தேசியத் தலைவர் ஜெபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உடனிருந்தனர்.
சில மணி நேரங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் சுவேந்து அதிகாரி முதலமைச்சர் மம்தா பானர்ஜியை நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதியில் தோற்கடித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க :டெல்லி செல்ல மறுக்கும் மேற்கு வங்க தலைமைச் செயலாளர்!