தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலுங்கானாவில் பாஜக பிரமுகர் தற்கொலை? - ஞானேந்திர பிரசாத்

தெலுங்கானாவில், பாஜக செயற்குழு உறுப்பினர் வீட்டில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானாவில் பாஜக பிரமுகர் தற்கொலை
தெலங்கானாவில் பாஜக பிரமுகர் தற்கொலை

By

Published : Aug 9, 2022, 10:51 AM IST

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் செர்லிங்கம்பள்ளி தொகுதியின் பாஜக செயற்குழு உறுப்பினர், ஞானேந்திர பிரசாத் (45). நேற்று (ஆக. 8) அவரது வீட்டின் மாடி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில், அவரின் உதவியாளர் பார்த்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவரின் தற்கொலை காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அவரிடம் இருந்து தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் சிக்கிய அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார்,'நேற்று காலையில், பிரசாத் தனது உதவியாளரிடம், தான் சிறிதுநேரம் தூங்கப்போவதாகவும், தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும், அவரது உதவியாளர் காலை உணவை அவரிடம் கொடுக்கச் சென்றபோது, நீண்டநேரம் கதவை தட்டியும் பிரசாத் கதவை திறக்கவில்லை. அப்போது, ஜன்னலை உடைத்து பார்த்தபோது, பிரசாத் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்' என தெரிவித்துள்ளனர். ஞானேந்திர பிரசாத்தின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:"நாட்டின் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றப்பட வேண்டும்" - வெங்கையா நாயுடு வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details