தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

`புதுச்சேரியில் பாஜக துணை முதலமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது`-மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி! - புதுச்சேரி மாநில பாஜக துணை முதலமைச்சர் பதிவு ஒதுக்கல்

புதுச்சேரியில் பாஜகவிற்கு துணை முதலமைச்சர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி
புதுச்சேரி

By

Published : May 8, 2021, 4:44 PM IST

புதுச்சேரியில் பாஜக மத்திய பாஜக இணை அமைச்சர் கிஷ்ன்ரெட்டி இன்று (மே 07) செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், `புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு இன்று (மே 7) பதவியேற்றது.

புதுச்சேரியில் முதன் முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தற்போது பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவராக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்` என்றார்.

மேலும், எங்கள் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மூன்று அமைச்சர்கள் பதவியும், பாஜகவிற்கு மூன்று அமைச்சர்கள் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் துணை முதலமைச்சர் பதவியும் அடங்கும் என்றும் அவர் கூறினார். இவர்கள் விரைவில் பதவி ஏற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் வியூகத்தை வகுத்து வருகி்றோம் என கூறிய அவர், புதுச்சேரியில் மக்களுக்குத் தேவையானதை மத்திய அரசின் உதவியுடன் நிறைவேற்றுவோம் என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details