மோர்பி: கடந்த அக்டோபர் 26-ம் நாள், குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 140 பேர் உயிரிழந்தனர். இதில் ராஜ்கோட் பாராளுமன்ற உறுப்பினர் மோகன் குந்தாரியாவின் உறவினர்கள் 12 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து, குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி, பாஜக 132 இடங்களில் முன்னிலையிலும் 22 இடங்களில் வெற்றியும் அடைந்துள்ளது. மேலும் காங்கிரஸ் 19 இடங்களிலும், ஆம் ஆத்மி 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
முக்கியமாக இந்த பெரும் விபத்து நிகழ்ந்த மோர்பியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் காந்திலால் அம்ருதியா 10,156 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அதேநேரம் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்திலால் படேல் 8,780 வாக்குகளுடனும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பங்கஜ் காந்திலால் ரசாரியா 2,577 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.