தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பேரணிகள் மூலம் மக்களை கொல்லும் பாஜக - மம்தா பானர்ஜி - மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பொய்களை பரப்பும் பாஜக, பேரணிகளை நடத்துவதன் மூலம் மக்களை கொன்று வருவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

Mamata
Mamata

By

Published : Dec 8, 2020, 9:38 PM IST

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பாஜக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், சிலிகுரியில் பாஜக நடத்திய பேரணியில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பொய்களை பரப்பும் பாஜக, பேரணிகளை நடத்துவதன் மூலம் மக்களை கொல்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பாஜக நடத்தும் பேரணிகளில் மக்கள் பங்கேற்காததால் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள சொந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களையே அக்கட்சி கொன்று குவிக்கிறது. நீங்கள் விளம்பரப்படுத்திக் கொள்ள உங்கள் கட்சி காரர்களை கல்லால் அடித்துக் கொள்கிறீர்களா? " என்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details