மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் பாஜக இளைஞரணி சார்பில் உத்தரகான்யா (டிச.7) என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து கூட்டத்தை கலைத்தனர்.
அப்போது, பாஜகவினருக்கும் காவல் துறைக்கும் ஏற்பட்ட தள்ளமுள்ளில் 50 வயது முதியவர் உயிரிழந்தார். காவல் துறை தடுப்பை பாஜகவினர் உடைக்க முயன்றதால் வன்முறை வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறையில் பாஜகவினர் 26 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.