ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, “காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசாங்கம் வலுப்படுத்திய பொருளாதாரத்தை, பிரதமர் நரேந்திர மோடி அழித்துவிட்டார்.
அவர் இரண்டு விதமான இந்துஸ்தானங்களை உருவாக்க விரும்புகிறார். ஒன்று பெரும் பணக்காரர்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலதிபர்கள் கொண்ட இந்தியா. மற்றொன்று தலித்துகள், ஏழைகள் நிறைந்த இந்தியா. ஆனால் காங்கிரஸ் ஒரே மாதிரியான இந்துஸ்தானத்தை விரும்புகிறது” என்றார்.
மேலும், “நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஆகியவற்றை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். இது குறித்து ராகுல் காந்தி, “நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதற்கிடையில் இந்தியப் பொருளாதாரத்தின் மீது பாஜக அரசாங்கம் தாக்குதல் தொடுக்கிறது. சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) தவறான முறையில் அமல்படுத்தப்பட்டதால் இந்திய பொருளாதாரம் அழிந்துவருகிறது. காங்கிரஸ் வலுப்படுத்திய நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி அழித்துவருகிறார்” என்றார்.
இதையும் படிங்க: சென்னை வரும் பிரதமர் மோடி.. புதிய திட்டத்தில் திமுக!