தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: டெல்லி பாஜக பொதுச்செயலாளர் சந்தோஷ் கோயல் மரணம் - தலைநகர் டெல்லி

டெல்லி: பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் சந்தோஷ் கோயல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (ஏப். 18) இரவு 9 மணியளவில் உயிரிழந்தார்.

பாஜக டெல்லி மாநில பொதுச்செயலாளர் சந்தோஷ் கோயல் கரோனாவால் உயிரிழப்பு
பாஜக டெல்லி மாநில பொதுச்செயலாளர் சந்தோஷ் கோயல் கரோனாவால் உயிரிழப்பு

By

Published : Apr 19, 2021, 10:30 AM IST

தலைநகர் டெல்லியில் கரோனா இரண்டாவது அலை அதிகரித்துவருகிறது. இது மாநிலம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லி மாநில பாஜக பொதுச்செயலாளர் சந்தோஷ் கோயல், கரோனா தொற்றால் உயிரிழந்தார். இச்செய்தியை அம்மாநில பாஜக உறுதிப்படுத்தியுள்ளது.

சமூகப் பணிகளில் ஆர்வம்

சந்தோஷ் கோயலுக்கு சமூகப் பணிகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. கரோனா ஊரடங்கின்போது, ஏழை மக்களுக்கு உணவு, நியாயவிலைக் கடைப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தார்.

மேலும் ஆயிரக்கணக்கான முகக்கவசங்களை மக்களுக்கு வழங்கினார். ஏழைகளுக்காகப் பல வகைகளில் உதவிபுரிந்துவந்த நிலையில் அவர் மறைவு கட்சி வேட்பாளர்கள், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details