மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்றது. இதையடுத்து நேற்று மாலை ஏழு மணிக்குப் பின் கருத்துகணிப்புகள் முடிவுகள் வெளியாகத் தொடங்கின.
இதில் பெரும்பாலான கருத்துகணிக்களில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திருணாமூல் காங்கிரஸ் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர்கள் பதில் அளித்துள்ளனர். பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, "பாஜக இந்த தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று ஆட்சியமைக்கும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாரும் பாஜக 18 மக்களவை இடங்களை கைப்பற்றும் என கணிக்கவில்லை. எனவே, மே 2ஆம் தேதிவரை காத்திருந்தால் அனைத்து பதிலும் கிடைத்துவிடும்" என்றார்.
கருத்துக்கணிப்பில், இந்தியா டுடே-ஆக்ஸிஸ், ரிபப்ளிக்-சி.என்.எக்ஸ். கருத்துகணிப்புகளைத் தவிர மற்ற அனைத்து கருத்துகணிப்புகளும் மம்தாவே மீண்டும் ஆட்சிக்கு வருவார் எனக் கணித்துள்ளனர். இந்த கருத்துகணிப்புகள் உண்மையாகும்பட்சத்தில் மம்தா தொடர்ந்து மூன்றவது முறை மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்பார்.