பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று (மே 13) காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை உடன் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே, நீண்ட நேரமாக ஜெயா நகர் தொகுதி முடிவு மட்டும் அறிவிக்கப்படாமலே இருந்தது.
பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஜெயா நகர் சட்டமன்றத் தொகுதியில், பாஜக வேட்பாளர் சிகே ராமமூர்த்தி - காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி முக்கிய வேட்பாளர்களாகக் கருதப்பட்டனர். முன்னதாக, 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சிகே ராமமூர்த்தி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
ஆனால், வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால், ராமமூர்த்தி தரப்பில் மீண்டும் வாக்கு எண்ணப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ஆளும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு முடிவை தங்களுக்கு (பாஜக) சாதகமாக மாற்றி விடும் என்பதால், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார், காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டியின் தந்தையும், மாநில செயற்குழு தலைவருமான ராமலிங்கா ரெட்டி உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள், வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.