தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

CT Ravi: கர்நாடகவில் 5வது முறையும் வெற்றி வாகை சூடுவாரா சி.டி.ரவி? - Karnataka Election 2023 result update

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் சிக்மகளூரு தொகுதியில் களம் கண்டுள்ள பாஜக முக்கிய பிரமுகர் சிடி ரவி 5வது முறையாக வெற்றி அடைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

CT Ravi: 5வது முறையும் வெற்றி வாகை சூடுவாரா சிடி ரவி?
CT Ravi: 5வது முறையும் வெற்றி வாகை சூடுவாரா சிடி ரவி?

By

Published : May 13, 2023, 10:00 AM IST

சிக்மகளூரு: பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளருமான சிடி ரவி, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் 2023இல், சிக்மகளூரு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதி கர்நாடகாவின் மத்தியில் உள்ளது. அதேநேரம், இது உடுப்பி சிக்மகளூரு மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும்.

இந்த தொகுதியில் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி, 1978ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, இந்த தொகுதி 2004ஆம் ஆண்டு வரை காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்தது. ஆனால், சிடி ரவி 2004ஆம் ஆண்டு தனது முதல் வெற்றியை பதிவு செய்ததில் இருந்து 4 முறை பாஜகவின் பக்கம் இந்த தொகுதி வந்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஷங்கரை 26 ஆயிரத்து 314 வாக்குகள் வித்தியாசத்தில் சிடி ரவி வென்றார். அதேநேரம், இந்த மக்களவை தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ஷோபா கரந்தாஜ்லே, ஜேடிஎஸ் கட்சியின் பிரமோத் மாத்வராஜை 3 லட்சத்து 49 ஆயிரத்து 599 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

அந்த அளவுக்கு, பாஜகவின் கோட்டையாக சிக்மகளூரு தொகுதி மாற்றம் அடைந்தது. இந்த நிலையில், 2023 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்டுள்ள பாஜகவின் சி.டி.ரவி போட்டியிடும் சிக்மகளூரு தொகுதியில், ஹெச்டி தாம்மையா (காங்கிரஸ்), எம்பி எரேகவுடா (ஆம் ஆத்மி), பிஎம் திம்மா ஷெட்டி (ஜேடிஎஸ்), சுதா கேபி (பிஎஸ்பி), யதீஷ் பிஜே (யுபிபி), ஷிவ பிரகாஷ் (கேஆர்எஸ்), சுயேட்சை வேட்பாளர்களாக அஃப்சல் பாஷா, சிகே ஜெகதீஷா, நூருல்லா கான், முனியப்பா, ஹெச்சி முல்லப்பா ஷெட்டி, மோஷினா, எம்ஜி விஜயகுமார், சஷீந்திரா பிஜி மற்றும் சையத் ஷாபி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இதனிடையே, சிடி ரவி தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தொழில் விவசாயம் என கொடுத்துள்ளார். 55 வயதான சிடி ரவி, முதுகலை பட்டப் படிப்பை முடித்துள்ளார். மேலும், 3.8 கோடி ரூபாய் மதிப்புடைய அசையும் சொத்துக்கள் மற்றும் 2.6 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் என மொத்தம் 6.4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல், 5.5 லட்சம் ரூபாய் சுய வருமானம் என 12.6 லட்சம் ரூபாய் வருமானம் வருவதாகவும், 3.3 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் வழக்குகளும் கிடையாது எனவும் சிடி ரவி தெரிவித்துள்ளார். மேலும், இந்த தொகுதியில் லிங்காயத், ஒக்காலிகாஸ் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் இருந்தாலும், லிங்காயத் சமூக மக்களே அதிகமாக வசிக்கின்றனர்.

எனவே, லிங்காயத் சமூகத்தினரின் ஆதரவை பெறுவதில் பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளும் தீவிர முனைப்பு காட்டின. அதேநேரம், தற்போதைய சிக்மகளூரு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்டி தாம்மையா வெற்றி பெற்றால், லிங்காயத் சமூகத்தின் 2வது சட்டமன்ற உறுப்பினராக அவர் உருவாகுவார்.

இதற்கு முன்னதாக, கடந்த 1967ஆம் ஆண்டு சிக்மகளூரு தொகுதியில் இருந்து சிஎம்எஸ் சாஸ்திரி என்பவர் லிங்காயத் சமூகத்தில் இருந்து சிக்மகளூரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார். மேலும், இன்று (மே 13) காலை முதல் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு எண்ணிக்கையில், தற்போதைய நிலவரப்படி சிடி ரவி பின்னடைவில் இருக்கிறார்.

அதேநேரம், காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தனது தொகுதியில் பின்னடைவில் இருக்கிறார். இதனிடையே, நேற்று (மே 12) இரவு சி.டி.ரவி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகக்கோளாறு இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:Karnataka Election: கர்நாடக தேர்தலில் குடும்பத்தினர் ஆதிக்கம் உள்ள தொகுதிகள் சிறப்பு பார்வை!

ABOUT THE AUTHOR

...view details