ஆண்டுதோறும் ஜூலை 21ஆம் தேதி திருணமூல் காங்கிரஸ் கட்சியின் மாவீரர் நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1993 ஜூலை 21ஆம் தேதி, மம்தா தலைமையில் நடைபெற்ற பேரணியில் மேற்கு வங்க காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் நினைவாக மம்தா ஆண்டுதோறும் மாவீரர் நாளாக அனுசரித்துவருகிறார். இந்தாண்டு மாவீரர் நாளில் பங்கேற்று உரையாற்றிய திருணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதலமைச்சருமான மம்தா பெகாசஸ் விவகாரம் குறித்து கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்.
அவர் பேசியதாவது, "கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்க்கும்விதமாக பாஜக அரசு செயல்பட்டுவருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசை வீழ்த்தாவிட்டால், நாடு அழிவின் பாதைக்குச் செல்லும்.