மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக புதுச்சேரி அரசு அமுல்படுத்த வேண்டுமென பாஐக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், யூனியன் பிரதேச அரசு இதுவரை தேசிய கல்வி கொள்கையை அமுல்படுத்த ஒப்புதல் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்! - BJP besieges Puducherry education office
புதுச்சேரி : மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை புதுச்சேரியில் உடனடியாக அமல்படுத்த வேண்டுமெனக் கோரி கல்வித்துறை அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்! புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:38:56:1605712136-tn-pud-03-bjp-arpatam-7206842-18112020201856-1811f-1605710936-706.jpg)
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் தலைமையிலான அரசின் கல்வித்துறையைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று புதுச்சேரி பாஜக ஓ.பி.சி அணியின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் கல்வித்துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
கல்வித்துறை அலுவலகம் முன்பு திரண்டு பாஜகவினர் உடனடியாக தேசிய கல்விக் கொள்கையை புதுச்சேரி கல்வித்துறை அமல்படுத்தக்கோரி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.